இலங்கை குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு

இலங்கை குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
 | 

இலங்கை குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு

இலங்கை குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டர் பக்கத்தில், இலங்கையில் 8 இடங்களில்  நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். லோகாஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

இலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் கொழும்புவில் உள்ள தூதரகத்தை அணுகலாம் என்றும், இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், தேவைப்பட்டால் மருத்துவக்குழுக்களையும் அனுப்ப தயாராக இருப்பதாக இலங்கை அமைச்சரிடம் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளார்.

இலங்கையில் இன்று தேவாலயம் உள்பட 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP