Logo

புல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானை நெருக்கமான நாடுகளின் பட்டியலிலிருந்து இந்திய அரசு நீக்கியதை தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 200% வரி விதித்துள்ளது மத்திய அரசு.
 | 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதி நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில், 49 சிஆர்பிஎஃப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதலுக்கு காரணம் என்ன தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக, பாகிஸ்தானை இந்தியாவுக்கு நெருக்கமான நாடுகள் பட்டியலில் இருந்து நேற்று மத்திய அரசு நீக்கியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் 200 சதவீதம் வரி விதித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP