காஷ்மீரில் அனந்த்நாக் பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
 | 

காஷ்மீரில் அனந்த்நாக் பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீரில் நாளுக்கு நாள் தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது. இரு தினங்களுக்கு முன்பாக பந்திப்போரா, புல்வாமா ஆகிய இடங்களில் தாக்குதல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அந்த வீட்டில் 3 பேர் பதுங்கியிருந்ததாக தகவல் வெளியான நிலையில், தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், தாக்குதலானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலினால் அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகர் பகுதியில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP