15 நாட்களில் 1.93 லட்சம் பேர் பயணம்...எங்கே தெரியுமா?

இமயமலையில் அமர்நாத் குகை கோயிலில் அமைந்துள்ள பனிலிங்கத்தை, தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து வருவதை ஹிந்துக்கள் தங்களது தலையாய ஆன்மிக கடமையாக கொண்டுள்ளனர்.
 | 

இதனை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் அமர்நாத் புனித யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அமர்நாத் புனித யாத்திரை வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த யாத்திரை, நிகழாண்டு ஜூலை 1 -ஆம் தேதி தொடங்கியது.

கடந்த 15 நாள்களில் மட்டும் 1.93 லட்சம் பேர் இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளதாகவும், மேலும் 3,967 பேரை கொண்ட 15 -வது குழுவினர் ஜம்முவிலிருந்து அமர்நாத்துக்கு இன்று புறப்பட்டுள்ளதாகவும் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான யாத்திரை வரும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP