பாலகோட் தாக்குதலில் 170 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: இத்தாலி பத்திரிக்கையாளர் பரபரப்பு தகவல் 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் மீது, இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், பயங்கரவாத முகாம் முற்றிலும் தாக்கி அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில், 170 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 45 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், இத்தாலியை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரான்சசோ மரினா தெரிவித்துள்ளார்.
 | 

இது குறித்து, பத்திரிக்கையாளர் மரினா மேலும் கூறியதாவது: ‛‛ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பிப்.,14ம் தேதி, சிஆர்பிஎப் வீரர்கள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிப்., 26ல், இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில், குண்டுமழை பொழிந்தது. 

இதில், அங்கிருந்த பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. அதில் பயிற்சி பெற்று வந்த, 170 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர். அதிகாலை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய மூன்று மணி நேரத்திற்குப் பின், பாக்., ராணுவ அதிகாரிகள், வீரர்கள் அங்கு வந்தனர். 

படுகாயமடைந்த பயங்கரவாதிகளை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில், 20 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். இன்றும், 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் குணமாகிவிட்டாலும், பாக்.,  ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளனர். 

பலியான பயங்கரவாதிகளின் குடும்பத்தாரை சந்தித்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பினர், அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்துள்ளனர். மேலும், ஏற்கனவே செயல்பட்டு வந்த அதே இடத்தில், மீண்டும் பயங்கரவாத முகாம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த இந்தியா மீது, பதில் தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் சரியான நேரம் பார்த்து காத்திருக்கின்றனர்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP