வளைகுடா நாடுகளில் ஓர் நாளைக்கு 15 இந்தியர்கள் உயிரிழப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை!!! 

வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில், கடந்த 5 ஆண்டுகளில் ஓர் நாளைக்கு 15 இந்தியர்கள் வீதம் இதுவரை சுமார் 34,000 பேர் இறந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
 | 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, வளைகுடா நாடுகளில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 33,988 இந்தியர்கள் இறந்துள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 4,823 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமான உயிரிழப்பு சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் பதிவாகியிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மக்களவையின் கூட்டுத்தொடரில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளிதரன், முறையான சம்பளம் வழங்கப்படாதது, தொழிலாளர் உரிமை மறுப்பு, குடியிறுப்பு அணுமதி வழங்கப்படாதது, வார விடுமறை அளிக்கப்படாதது, முறையான வேலை நேரம் கடைபிடிக்கப்படாமல் நீண்ட நேரம் வேலை வாங்குவது ஆகியவையே இத்தகைய இறப்புகளுக்கான முக்கிய காரணங்களாக கருதப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒப்பந்த காலம் முடிவடைந்தவுடன் தொழிலாளர்களக்கு இந்தியா திரும்ப அனுமதி மறுக்கப்படுவதாகவும், மருத்துவ காப்பீட்டு வசதிகள் வழங்கப்படுவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார் முரளிதரன்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP