ரசகுல்லா பற்றி ட்வீட் செய்தவருக்கு 14 நாட்கள் சிறை!

ரசகுல்லா கொல்கத்தாவில் தான் முதன்முதலாக சமைக்கப்பட்டது என்று கூறியதற்காக டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் அபிஜித் ஐயர்-மித்ரா கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 | 

டெல்லியை சேர்ந்த சர்வதேச பாதுகாப்பு நிபுணரும் பத்திரிகையாளருமான அபிஜித் மித்ரா சமீபத்தில் ஒடிசா சட்டமன்றத்தில் அம்மாநிலம் குறித்து அவதூறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்டார். அவர் சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்த உடன் அவரை போலீசார் கைது செய்தனர். 

மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்து  தெரிவித்தால் அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. பின்னர் அவர் பல மாதங்களுக்கு முன்னர் ரசகுல்லா எங்கு தோன்றியது என்ற ட்விட்டர் வாதத்தில், ஒடிசாவில் ரசகுல்லா தோன்றவில்லை, மேற்கு வங்கத்தில் தான் தோன்றியது என்று ட்வீட் செய்திருந்ததால் தான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் நிகில் மேஹ்ரா தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அபிஜித்துக்கு 14 நாட்கள் சிறை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரசகுல்லா பற்றி ட்வீட் செய்தவருக்கு 14 நாட்கள் சிறை!

முன்னதாக கொனர்க் சூரிய கோவிலுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி சென்றிருந்த அபிஜித், கோவிலை குறித்து ஒரு வீடியோவை பதிவிட்டார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP