கர்நாடக சட்டப்பேரவை பகுதியில் 144 தடை உத்தரவு!

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் குமாரசாமி ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருப்பதால் விதான் சபாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 | 

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் - மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 16 பேர் (காங்கிரஸ் - 13, மஜத -3) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளால் கர்நாடக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, இன்று முதலமைச்சர் குமாரசாமி ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. இதனால் கர்நாடக சட்டப்பேரவையை சுற்றிலும் 2 கிமீ  தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP