7 வயது சிறுவனை பலிகொடுத்த 14வயது சிறுவன் கைது!

மேற்கு வங்காளத்தில் 7வயது சிறுவனை சூனியம் செய்வதற்காக பலி கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

7 வயது சிறுவனை பலிகொடுத்த 14வயது சிறுவன் கைது!

மேற்கு வங்காளத்தில் 7வயது சிறுவனை  சூனியம் செய்வதற்காக பலி கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த  14 வயது சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் உள்ள நிரஞ்சன்பர் என்னும் கிராமத்தை சேர்ந்த ரத்தன் நாயக் என்பவரது 7 வயது மகன் ருத்ரா நாயக்.  இந்த சிறுவன் கடந்த சனிக்கிழமை அன்று காலையில் விளையாட சென்றவன் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதனை அடுத்து அன்று இரவு ருத்ரா நாயக்கின் பெற்றோர்கள் கிராமம் முழுவதும் சிறுவனை தேடி அழைத்துள்ளனர். அப்போது ருத்ராஅவனது பக்கத்து வீட்டிற்குள் சென்றதாக ஒருவர்  ஒருவர் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது ருத்ரா நாயக் கை கால்கள் கட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த வீட்டில் வசிக்கு, 14 வயதான சிறுவனை விசாரித்த போது  தனது முன்னோர்களை போலவே தானும் சூனியக்காரன் ஆவதற்காக 7 வயது சிறுவனை பிரசாதம் தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்து கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். பின்னர் அந்த சிறுவன் மற்றும்  அவனது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP