கூடாரம் சரிந்து 14 பேர் பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

ராஜஸ்தானில் கூடாரம் சரிந்து விழுந்து உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 | 

கூடாரம் சரிந்து 14 பேர் பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

ராஜஸ்தானில் கோயில் ஒன்றில் கூடாரம் சரிந்து விழுந்து நிகழ்ந்த விபத்தில், உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் பார்மரில் அமைந்துள்ள ராணி பதியாணி கோயிலில் இன்று ஆன்மிக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்  நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். அப்போது, சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததில்,  நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போடப்பட்டிருந்த பிரமாண்ட கூடாரம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். 

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இதேபோல், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP