இமாச்சல்: கட்டட விபத்தில் 12 ராணுவ வீரர்கள் உட்பட13 பேர் பலி!

இமாச்சல பிரதேசத்தில் உணவக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 12 ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

இமாச்சல்: கட்டட விபத்தில் 12 ராணுவ வீரர்கள் உட்பட13 பேர் பலி!

இமாச்சல பிரதேசத்தில் உணவக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 12 ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

இமாச்சல பிரதேசம் குமார்ஹட்டியில் உள்ள தபா என்ற உணவக கட்டடம் திடிரென இடிந்து விழுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் கட்டிட இடுபாடுகளில் சிக்கிய 17 ராணுவ வீரர்கள் மற்றும் 11 பொதுமக்களை மீட்க முயன்றனர். ஆனால் உணவகத்திற்குள் இருந்த 12 ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மேலும் ஒரு ராணுவ வீரரை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP