12 போர் விமானங்கள்; 1000 கிலோ வெடிமருந்து; 21 நிமிட துல்லிய தாக்குதல்: நடந்தது எப்படி?

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இன்று நடத்திய துல்லிய தாக்குதல் மூலமாக, இந்தியா தனது பலத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது என்று கூறலாம். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது இந்திய விமானப்படை. இந்த தாக்குதல் எப்படி நடந்தது?
 | 

12 போர் விமானங்கள்; 1000 கிலோ வெடிமருந்து;  21 நிமிட துல்லிய தாக்குதல்: நடந்தது எப்படி?

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை இன்று நடத்திய துல்லிய தாக்குதல் மூலமாக, இந்தியா தனது பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது இந்திய விமானப்படை...

இந்த தாக்குதல் நடந்தது எப்படி?

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி, மத்திய பாதுகாப்புபடையினரின் வாகனங்கள் மீது ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு நடத்திய தீவிரவாத தற்கொலைப்படை தாக்குதலில், இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.நா சபை மற்றும் உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. இந்தியா விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இன்று யாரும் எதிர்பாராத சமயத்தில் இந்திய விமானப்படை, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது வான்வழித்தாக்குதலை நடத்தியுள்ளது. 

அதிகாலையில் நடந்த தாக்குதல்

இந்திய விமானப்படை இன்று அதிகாலை 3.30 மணியளவில் குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து கிளம்பியது. 12 'மிராஜ் 2000' ரக போர் விமானங்களுடன், 1000 கிலோ எடை கொண்ட குண்டுகளுடன் போரிட புறப்பட்டது விமானப்படை. அதிகாலை 3.45 மணியளவில் பாலகோட் என்ற பகுதிக்கு சென்றடைந்த போர் விமானங்கள், அங்குள்ள தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை பொழிந்தன. இங்கு தான் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் பயிற்சி மையம் செயல்பட்டு வந்ததாக தகவல். 

12 போர் விமானங்கள்; 1000 கிலோ வெடிமருந்து;  21 நிமிட துல்லிய தாக்குதல்: நடந்தது எப்படி?

தொடர்ந்து, அடுத்த 3 நிமிடங்களில், அதாவது 3.48 மணிக்கு முஸாஃபராபாத் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய போது தீவிரவாதிகள் தூக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்ததாக 3.58 மணியளவில் சாக்கோதி பகுதியில் போர் விமானங்கள் குண்டுகளை பொழிந்தன. இந்த தாக்குதல் எல்லைக்கட்டுப்பாடு கோட்டைக் கடந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளையும் கடந்து பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள்ளேயே மொத்தம் 21 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்குள் நுழைந்து பத்திரமாக திரும்பிய விமானங்கள்

இதில், முக்கியமாக பார்க்கவேண்டியது, பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா பகுதியிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக பாகிஸ்தானுக்குள் சென்று இந்திய விமானப்படை ஒருமுறை எச்சரித்து வந்துள்ளது. 1971ம் ஆண்டு இந்திய -பாகிஸ்தான் போருக்கு பிறகு பாகிஸ்தானுக்குள் சென்று இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடத்திய தாக்குதலில் சுமார் 80 கிமீ வரை பாகிஸ்தானுக்குள் இந்தியா சென்றுள்ளது.  

12 போர் விமானங்கள்; 1000 கிலோ வெடிமருந்து;  21 நிமிட துல்லிய தாக்குதல்: நடந்தது எப்படி?

மேலும், எந்த தடையும் இன்றி தாக்குதல் வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது பாராட்டப்படவேண்டிய ஒன்று. அதுமட்டுமின்றி அனைத்து  விமானங்களும் பத்திரமாக தாயகம் திரும்பியிருப்பது, இந்த தாக்குதல் எவ்வ்ளவு துல்லியமாக, திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை காட்டுகிறது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் இந்திய விமானப்படையின் ஆக்ரோஷத்தை கண்டு, பாகிஸ்தான் விமானங்கள் போராட முடியாமல் திரும்பி சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

10 முகாம்கள் அழிப்பு

இந்த தாக்குதலில் மேற்குறிப்பிட்ட 3 பகுதிகளில் உள்ள 10 தீவிரவாத முகாம்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிலும் 100 முதல் 200 பேர் வரை இருக்கலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று அதிகாரப்பூர்வ தகவலின் மூலமே தெரிய வரும். பொதுமக்கள் யாரும் வசித்து வராத இடங்களில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டிருந்ததால் தீவிரவாதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளதாக விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.

12 போர் விமானங்கள்; 1000 கிலோ வெடிமருந்து;  21 நிமிட துல்லிய தாக்குதல்: நடந்தது எப்படி?

இந்திய விமானப்படையின் திட்டமிடல்:

முன்னதாக,வான் எல்லை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இருபத்தி நான்கு மணிநேரமும் விமான கண்காணிப்பின் கீழ் ஒட்டுமொத்த தேசமும் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், இந்தியா விமானப்படை அந்த விமானங்களைக் கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைய முடியாது என்று அந்த நாட்டு ராணுவம் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மார் தட்டியிருந்தது. அப்படி இருக்கையில், இந்தியா இந்த தாக்குதலை நடத்த எவ்வளவு திட்டமிட்டிருக்க வேண்டும்? 

தாக்குதல் நடத்தி முடித்து விட்டு இந்திய விமானங்கள் திரும்பி வரும்வரை பாகிஸ்தான் ரேடார் கண்காணிப்பு அமைப்பில் நம் நாட்டு விமானப்படை விமானங்கள் சிக்கவில்லை என்பது எப்படி சாத்தியமானது என்பது புரியாத புதிராக உள்ளது.

முறையாக திட்டமிட்டு அதிகாலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. குவாலியர் தளத்தில் இருந்து  கிளம்பிய விமானங்கள் முதலில் மிகக்குறைந்த உயரத்திலேயே பறந்துள்ளன.

12 போர் விமானங்கள்; 1000 கிலோ வெடிமருந்து;  21 நிமிட துல்லிய தாக்குதல்: நடந்தது எப்படி?

லேசர் உதவியுடன் குண்டுமழை

மேலும், இலக்கை தவறவிட்டுவிடக்கூடாது என்று லேசர் உதவியுடன் சரியாக இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இலக்கை துல்லியமாக தாக்க லேசர் தொழில்நுட்ப உதவியுடன் கூடிய வழிகாட்டிகள், இலக்கை துல்லியமாக தாக்கும் குண்டுகள் என்ற அதிநவீன தொழில்நுட்பம் இதில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட மிராஜ் விமானங்களுக்கு பாதுகாப்பாக சுகோய் விமானங்கள் அவ்விமானங்களின் கூடவே பறந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி

முன்னதாக, பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் எங்கெங்கு உள்ளது, எவ்வளவு பரப்பளவு, எவ்வளவு வெடிபொருட்கள் தேவை, எந்த நேரத்தில் தாக்கி துல்லியமாக அழிக்க முடியும் என்று திட்டமிட்டு அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி, பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது இந்திய விமானப்படை. 

ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரதிபலிப்பாகவே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP