10ம் வகுப்பு தமிழ் வினாத்தாளில் குளறுபடி! வருத்தத்தில் மாணவர்கள்!

கேரள மாநிலத்தில் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஒரே கேள்வி இரண்டு முறை, கேள்விகளில் பிழைகள் இருந்தால் மாணவ, மாணவிகள் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 | 

10ம் வகுப்பு தமிழ் வினாத்தாளில் குளறுபடி! வருத்தத்தில் மாணவர்கள்!

கேரள மாநிலத்தில் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஒரே கேள்வி இரண்டு முறை மற்றும் கேள்விகளில் பிழைகள் இருந்ததால் மாணவ, மாணவிகள் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியா முழுவதுமே பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கேரளாவில் சிறுபான்மை மொழி பிரிவு அடிப்படையில், தமிழ் மாணவர்களுக்காக தமிழ் மொழித் தேர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில், 10ம் வகுப்பு தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் வினாத்தாள்களில், பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளன. 

வினாத்தாளில் ஒரு கேள்வியே இரண்டு முறை கேட்கப்பட்டுள்ளது. மேலும் சில பிழைகளும் இடம்பெற்றுள்ளன. இது மாணவர்களிடையே குழப்பத்தில் ஏற்படுத்தியுள்ளது. மாநில தேர்வாணையத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. 

இதையடுத்து, கேரள அரசு இது தொடர்பாக தேர்வாணையத்திடம் விளக்கம் கேட்பதுடன், சரியான வினாத்தாள் தயாரித்து மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP