வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் 10 கி.மீ. மலையேறிய ஊழியர்கள்!

மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்தார் அருகேயுள்ளது புக்ஸா மலை. இது தரை மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரம் உடையதாகும். மலைக்கு மேலே மூன்று வாக்குச்சாவடிகள் உள்ளன. இதையொட்டி, தேர்தல் அலுவலர்கள் மலையேறிச் சென்றனர்.
 | 

வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் 10 கி.மீ. மலையேறிய ஊழியர்கள்!

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர்களின் ஜனநாயகத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அலுவலர்கள் 10 கி.மீ. மலையேறிச் சென்றனர்.

அலிபுர்தார் அருகேயுள்ளது புக்ஸா மலை. இது தரை மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரம் உடையதாகும். மலைக்கு மேலே மூன்று வாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னதாக, வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நடந்தே சென்றனர். அவர்களுக்கு துணையாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் இயந்திரங்களை எடுத்து வந்தனர். சுமார் 3 மணி நேர பயணத்துக்குப் பின் அவர்கள் வாக்குச்சாவடியை அடைந்தனர். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இந்த மூன்று வாக்குச்சாவடிகளில் 7,000 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP