ஜாலியன் வாலாபாக் படுகொலை 100 ஆண்டுகள் நிறைவு; குண்டடிப்பட்ட அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தனன் 100-வது ஆண்டு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
 | 

ஜாலியன் வாலாபாக் படுகொலை 100 ஆண்டுகள் நிறைவு; குண்டடிப்பட்ட அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன

ஜாலியன் வாலாபாக் படுகொலை  நிகழ்ந்தனன் 100-வது ஆண்டு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

சுதந்திர போரட்டங்களை ஒடுக்க ரவுலட் எனும் அடக்குமுறை சட்டத்தை ஆங்கில அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி ஜாலியன் வாலாபாக்கில் கண்டன கூட்டம் நடைபெற்றது.  நாற்புறமும் மதில்களால் சூழப்பட்ட குறுகிய வாசல் கொண்ட இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அப்போது, ஆங்கில அரசின் ஜெனரல் டயர் முன்னறிவிப்பின்றி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். 10  நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக பலியானார்கள்.  ஆனால், 1,650 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் 379 பேர் மட்டுமே இறந்ததாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. 

இதனிடையே, துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்த 120 பேரும் உயிரிழந்தனர். 

மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த சுட்டதாக ஜெனரல் டயர் உயர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார். 

இதனைத்தொடர்ந்து, ஆங்கிலேயே அரசு ஆணையம் அமைத்து விசாரித்தும் ஜெனரல் டயருக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை.

படுகொலை நிகழ்ந்து 21 ஆண்டுக்குப் பின் லண்டனில் ஜெனரல் டயரை இந்தியர் உத்தம் சிங் சுட்டுக்கொன்றார்.

படுகொலை நிகழ்ந்த மைதான சுவர்களில் குண்டடிப்பட்ட அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன.

சுதந்திர போராட்ட வீரர்களின் உயிர்  தியாகத்தை மறக்காமல், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்...!

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP