காந்திகள் யதார்த்தம் புரியாமலிருக்கிறார்கள் - சஞ்சய் நிருபம்!!

காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்திகள் அரசியல் உலகின் யதார்த்தம் புரியாமல் செயல்பட்டு வருகிறார்கள் என சஞ்சய் நிருபம் தாக்கியுள்ளார்.
 | 

காந்திகள் யதார்த்தம் புரியாமலிருக்கிறார்கள் - சஞ்சய் நிருபம்!!

காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்திகள் அரசியல் உலகின்  யதார்த்தம் புரியாமல் செயல்பட்டு வருகிறார்கள் என சஞ்சய் நிருபம் தாக்கியுள்ளார்.

மஹாராஷ்டிரம் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மஹாராஷ்டிர மாநில காங்கிரஸ் தேர்தல் குழு தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாகவும், அதனால் இனி தேர்தல் பணிகளில் ஈடுபட போவதில்லை எனவும் அம்மாநில கட்சித் தலைவர் சஞ்சய் நிருபம் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், "மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒவ்வொரு நகரிலும், ஒரு முஸ்லீம் வேட்பாளரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க நான் பிரிந்துரைத்தேன். ஆனால், அது முழுவதுமாக நிராகரிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. டெல்லியில் இருந்துக் கொண்டு, ஒரு கண்ணோட்டத்திலேயே பார்க்கும் அவர்களுக்கு யதார்த்த சூழல் தெரிவதில்லை. 

 

 

காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்திகள் அரசியல் உலகின்  யதார்த்தம் புரியாமல் செயல்பட்டு வருகிறார்கள். எனது கடைசி மூச்சு வரை கட்சிக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆனால், காங்கிரஸிற்கு எனது சேவை இனி தேவையில்லை போலும். கட்சிக்காக உழைத்தவர்களை அவர்கள் அவமதிக்கிறார்கள். இந்நிலை தொடர்ந்தால், கட்சியிலிருந்து நான் விலகும் நாள் வெகு தொலைவில் இருக்காது" என வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP