மறந்துடாதீங்க! (FasTag) பாஸ்ட் டேக் பெற இன்றே கடைசி நாள்!

சுங்க சாவடியில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் பாஸ்ட் டேக் அமுலுக்கு வருகிறது. ஃபாஸ்ட் டேக் பெறாமல், அதன் பின்னர் சுங்கச்சாவடிகளில் பயணித்தால் நீங்கள் பணம் செலுத்தி தான் சுங்கச்சாவடியைக் கடக்க வேண்டும். மேலும், இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

மறந்துடாதீங்க! (FasTag) பாஸ்ட் டேக் பெற இன்றே கடைசி நாள்!

சுங்க சாவடியில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் பாஸ்ட் டேக் அமுலுக்கு வருகிறது. ஃபாஸ்ட் டேக் பெறாமல், அதன் பின்னர் சுங்கச்சாவடிகளில் பயணித்தால் நீங்கள் பணம் செலுத்தி தான் சுங்கச்சாவடியைக் கடக்க வேண்டும். மேலும், இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் சோதனை அடிப்படையில் ஃபாஸ்ட் டேக் டிஜிட்டல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஃபாஸ்ட் டேக் வசதியானது RFID என்ற தொழில்நுட்பத்தில் மூலம் இயங்குகிறது. சுங்கச்சாவடிக்கு அருகே 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும் போது ரேடியோ அதிர்வு எண் தொழில் நுட்ப சாதனங்கள் மூலம் ஃகாரில் ஒட்டியுள்ள ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து விடும். நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் மின்னணு அட்டைகளை பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன்  முடிவடைகிறது.நாளை முதல் இந்த முறை நடைமுறைக்கு வர இருக்கிறது. 

ஃபாஸ்ட் டேக் என்றால் என்ன?  

ஃபாஸ்ட் டேக் என்பது ஒரு கார்ட் ஆகும். இந்த கார்ட்டை முன்னதாகவே பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த கார்ட்டை ஸ்டிக்கர் போல் உங்கள் வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டிக் கொள்ளலாம். ஃபாஸ்ட் டேக் வழித்தடத்தில் தடுப்புக் கம்பிக்கு மேல் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்கேனர் கருவி, இந்த வழித்தடத்தில் உங்கள் வாகனம் செல்லும் போது, வாகனத்தின் கண்ணாடியில் உள்ள ஸ்டிக்கரை உடனடியாக ஸ்கேன் செய்யும்.அப்படி உங்கள் வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்த சில விநாடிகளிலேயே மொத்தமாக செலுத்திய பணத்தில் இருந்து. அந்த சுங்கச்சாவடிக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட் செய்து கொள்ளும். அதன் பின்னர் தடுப்புக் கம்பி தானாக திறந்து, உங்கள் வாகனத்திற்கு வழி விடும். இது அனைத்தும் வழக்கம் போல் தொழில்நுட்ப முறையில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும். 

இந்நிலையில், நீங்கள் வாங்கியிருக்கும் பாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்தியதும் மீண்டும் ரீசார்ஜ் செய்வது எப்படி? 

பாஸ்ட் டேக் வாடிக்கையாளர்கள் ஒரு முறைக்கு ரூ 100 முதல் ரூ 1 லட்சம் வரை ரீ சார்ஜ் செய்துக் கொள்ளலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மற்றும் ஆன்லைன் மூலமாக இந்த பாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம். இது தவிர, வாகனங்களில் செல்லும் போது, நீங்கள் கடக்கும் சுங்கசாவடிகளிலும் நேரடியாக ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP