போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 1

திமுக நபரின் திருமண விழாவில் ஸ்டாலினுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொண்ட சி பி ராதாகிருஷ்ணன், கருணாநிதிக்குப் பின், ஸ்டாலின் எங்களை வீழ்த்தி திமுகவை ஏற்றி பெறச்செய்துள்ளார் என்றார். இப்படிப்பட்டவர்கள் தான் தமிழக பாஜக முகமாக இதுவரை இருந்துள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு கட்சியை வளர்த்து, ஆட்சியை பிடிப்பதெல்லாம் எவ்வளவு பெரிய மனக்கோட்டை என்பதை அமித் ஷா உணர வேண்டும்.
 | 

போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 1

தமிழகத்தில், 1980களில் வேலை இல்லாமல் ஒரு ஆசிரியர் அரசு பள்ளிகளில் வேலை செய்தார். அவர் பெயர் இந்தி பண்டிட். தமிழகத்தில் இந்தி திணிப்பை  திராவிடக் கட்சிகள் தடுத்து நிறுத்தி பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அரசு பள்ளிகளில் இந்தி பண்டிட் என்ற ஆசிரியர் இருந்தார் என்றால், உண்மையில் தமிழகத்தில் நடந்தது இந்தி திணிப்பா அல்லது இந்தி அழிப்பா என்ற கேள்வி எழுகிறது. 

ஒரு குடும்பத்தை யார் பாதுகாப்பது, பராமரிப்பது என்ற கேள்வி எழுகிறது. அப்போது குடும்ப உறுப்பினர்கள் தாத்தா காலத்தில் குடும்பத்தை விட்டு வெளியேறிய சித்தப்பா வேண்டாம். அப்பா இருக்காரு, அந்த வீட்டில் வசதிக்கு அங்கிள் இருக்காரு என்று கூறினால் அந்த குடும்பத்தின் கரு பற்றிய சந்தேகம் தானே எழும். 

அதே போல இந்தநாட்டில் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியாக 1960களில் ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் மொழியாக இந்தி இருந்தது.  இந்த காலகட்டத்தில் டெல்லி முழுவதும் நம்ம ஊர் ஐயர்களும், திருநெல்வேலி பிள்ளை மார்களும் தான் ஐஏஎஸ் அதிகாரிகளாக வலம் வந்தார்கள் என்பதும் இந்த நேரத்தில் நினைத்து பார்க்க வேண்டியது.

போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 1

தொடர்ந்து திமுக தமிழகத்தில் ஒரு முறை அல்ல, 2 முறை அல்ல 3 முறை இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தியது. தமிழகத்தின் அவலங்களில் முக்கியமானது பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் தமிழகத்தை தேசியத்துடன் இணைக்கும் வகையிலான தகுதி கொண்ட தலைவர்கள் தற்போது இல்லாது. தமிழக மக்கள் உணர்வு பூர்வமாக பொய்களை திரும்ப திரும்ப அடுக்கு மொழியில் சொன்னால் உண்மை என்று நம்புவது. 

இன்றைக்கு கூட எண்ணி பாராட்டும் காமராஜர் வாழ்ந்த காலத்திலேயே அவர் ஊழல்வாதி என்ற திமுகவின் பேச்சை நம்பி அவரை தோற்கடித்தவர்கள் தமிழர்கள் என்பதே நம்மவர்கள் எவ்வளவு ஏமாளிகள் என்பது வெளிப்படையாக விளங்கும். 

அண்ணாதுரை, கருணாநிதி புகழ் பாடும் தமிழகத்தில் ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் முதல்வர்களாக இருந்த திமுகவின் வித்தான நீதிக்கட்சியின் சார்பில் முதல்வராக இருந்த சுப்பராயலு, பனகல்ராஜா, சுப்பராயன், முனுசுவாமி நாயுடு,ராமகிருஷ்ண ரங்காராவ், கூர்மா வெங்கடரெட்டி நாயுடு போன்ற யாரைப்பற்றியும் தமிழக மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்று பாடப்புத்தக்கத்தில் ஒரு வரி கூட இல்லாமல் பார்த்துக் கொண்டது திமுக, அதில் இருந்து வந்த அதிமுக.

இவர்கள் தான் இப்படி என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரி, பிரகாசம், ஓமாந்துார் ராமசாமி ரெட்டியார், குமாரசுவாமி ராஜா,பக்தவத்சலம் ஆகியோர் பற்றி  பேச இன்றளவும் காஙகிரஸ் கட்சி கூட தயாராக இல்லை.

இப்படி பட்ட சூழ்நிலையில் தான் திமுக இந்தி திணிப்பை கையில் எடுக்கிறது. இது பற்றிய உண்மை நிலையை அப்போது எடுத்துக் கூற காங்கிரஸ் கட்சியினர் தயாராக இல்லை என்றதால் அந்த போராட்டம் ஏழை எளிய மாணவர்கள் இந்தி படிக்க இயலாத நிலையை தோற்றுவித்ததே தவிர்த்து எந்தவிதமா பலனையும் தரவில்லை.

போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 1

முதல், 2வது இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போதாவது திமுக சரியோ தவறோ இரட்டை நிலைப்பாடு எடுக்க வில்லை. சமீபத்தில் பாஜக இந்தி விவகாரத்தை கையில் எடுத்த போது 3வது முறையாக திமுகவும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது. ஆனால் இந்த முறை அந்த கட்சியின் போலியாத்தான் இந்தி எதிர்ப்பை காட்டுகிறது என்று வெட்ட வெளிச்சமாகியது.

தமிழகத்தில் விரட்டியக்கப்பட்ட இந்தியை தயாநிதி நன்கு பேசுவார் என்று கருணாநிதியே சான்றிழ் கொடுத்ததை தமிழகமே நன்கு அறியும். லோக்சபா தேர்தல் காலத்தில் திமுகவில் இருப்பவர்கள் தங்கள் வேட்பாளர் எப்படியெல்லாம் இந்தி பேசுவார் என்று புகழாங்கிதம் அடைந்து கொள்வார்ள். 

தாய் தமிழ் பள்ளி என்று வெளியே தெரியாதவர்கள் நடத்தும் போது திமுகவினர் இந்தியை, ஆங்கிலத்தை மட்டுமே மொழிப்பாடங்களாக கொண்ட எத்தனை சிபிஎஸ்சி பள்ளிகள் நடத்துகிறார்கள் என்று சமூகவலைதளங்களில் பட்டியல் வெளியானது.

இப்படி இந்தியை பொருத்தளவில் அது திமுக குடும்ப சொத்தாக மாறிவிட்ட நிலை தமிழகத்தில் உருவாகி விட்ட காலத்தில் தான் கடந்த ஆண்டு பாஜகவிற்கு எதிராக திமுக தொடங்கிய இந்தி எதிர்ப்பு பலன் அளிக்காமல் போய்விட்டது.

இன்றைக்கு 3 லட்சம் தமிழர்கள்  தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா நடத்தும் தேர்வு எழுதுகிறார்கள் என்ற போது இந்தி மறைமுகமாக எந்த அளவிற்கு வேர் ஊன்றி உள்ளது என்பது தெரியும். கிராமங்களில் கூட வட இந்தியர்களை வேலைக்காரர்களாக வைத்துள்ள முதலாளிகள் இப்போது இந்தி வேண்டும் என்ற சூழ்நிலைக்கு வந்துள்ளனர்.

கோவையில் ஆட்டோ மொபைல் துறையில் நிறுவனம் நடத்தும் முதலாளிகள் இந்தி அல்லது சமஸ்கிருதம் படிக்க வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். ஜெர்மன் போன்ற நாடுகள் இவர்களுடன் ஒப்பந்தம் புரிய முன்வரும் போது அவை ஆங்கிலத்தில் இருப்பதை விட இந்தி அல்லது சமஸ்கிருதத்தை தான் விரும்புகிறார்கள் என்று நம்ம கோவை தொழில் அதிபர்கள் கூறுகிறார்கள். இப்படி இந்தி அனைத்து வகையிலும் தமிழகத்தில் ஊடுறுவி விட்ட நிலையில் திமுக இந்தி எதிர்ப்பு என்ற நாடகத்தை நடத்துகிறார்கள்.

இந்தி மொழியின் ஆண்டு விழாவில் இந்த நாட்டின் ஓரே இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று குஜராத்தியான அமித்ஷா டுவிட்டரில் பதிவு இடுகிறார். இந்த நாட்டின் ஒரே மொழி என்று அவர் கூறவில்லை. ஒரே இணைப்பு மொழி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துகிறார். வழக்கம் போலேவே திமுக பொங்கி எழுந்து விஷயத்தை திசை திருப்பி விட்டது.

இந்த கட்சி உறுப்பினர்கள் மதுவை எதிர்பார்கள், மது ஆலைகள் நடத்துவார்கள். இந்தியை எதிர்ப்பார்கள் ஆனால் இந்தியை சிறப்பாக கற்றுக் கொடுக்கும்  பள்ளிகளை நடத்துவார்கள். பகுத்தறிவு பேசுவார்கள், இவர்கள் வீட்டு பெண்களே அதற்கு எதிராக நடப்பார்கள். இப்படி எல்லாவற்றிலும் போலியான நடவடிக்கை எடுப்பது திமுகவின் வாடிக்கையாக மாறிவிட்டது. 

போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 1

மற்றொரு மொழிப் போருக்கு திமுக தயாராகும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுகிறார். முதல்கட்டமாக திமுக எம்பிக்கள் இனி தமிழில் தான் பேசுவார்கள் என்று கூறலாமே. இனி திமுகவினர் தாய் தமிழ் பள்ளிகள் தான் நடத்துவாரகள், அதில் அரசு கட்டணமே வசூலிக்கப்படும் என்று கூறலாமே. சன் டிவி, கலை ஞர் டிவி போன்ற திமுக குடும்ப டிவிக்கள் இந்தியில் .மொழிமாற்றப்பட்ட, இந்தியிலும் எடுக்கப்பட்ட எந்த படத்தையும் வாங்காது என்று வெளிப்படையாக கூறலாமே. ஆனால் இது போன்ற எதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அதற்கு பதிலா மத்திய அரசு அலுலகங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிப்பார்கள். அவர்கள் உண்மையில் தார் பூசுவது ஏமாளித் தமிழர்களின் முகங்களில் தான்.

திமுக ஒரு கருத்தை சொன்ன பிறகு நாம் சொல்லாவிட்டால் தவறாகிவிடும் என்ற நினைப்பில் ராமதாஸ், வைகோ, வாசன். முத்தரசன் என்று எல்லா தலைவர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடரும் என்று நேரு கூறியதை எடுத்துக் காட்டி உள்ளார். ஆனால் தமிழக காங்கிரஸ் இந்தியை தமிழர்கள் விரும்பும் சூழ்நிலையை  ஏற்படுத்த வே்ண்டும் என்பதை அவர் மறந்துவிட்டார்.

இந்தியாவில் 43.63 கோடி பேர் இந்தியும், 8.03 கோடி பேர் பெங்காளி, 6.86 கோடி பேர் மராத்தி, 6.7 கோடி பேர் தெலுகு, 5.7 கோடி பேர் தமிழ், 4.58 கோடி பேர் குஜராத்தி பேசுகிறார்கள் என்று2011ம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரிவந்துள்ளது.

இந்தபட்டியலில் தமிழகத்தில் திருட்டு தனமாக இந்தி கற்பவர்கள் அடக்கம், அதே போல தமிழ்நாட்டில் வாழும் தமிழ் தெரியாது என்று கெத்து காட்டும்  மக்கள் நீக்கம்.

இந்த கணக்கின் படி தமிழகத்தில் இந்தி திணிக்காமலேயே பலர் அதனை படிக்கிறார்கள். தமிழக அரசியல் வாதிகள் உதவி செய்யாமலேயே உலக அளவில் தமிழ் படிக்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில் ஆட்சி மொழியாகவே தமிழ் ஏற்கப்படுகிறது.

இவற்றிக்கு எல்லாம் அங்குள்ள மக்கள் தொகை தான் காரணம். உண்மையில் இந்தியும், ஆங்கிலமும் இணைப்பு மொழியாக இருக்க வேண்டாம் என்றால் நம்மவர்கள் நாடுமுழுவதும் தமிழ் பள்ளிகள் திறக்க முன் வரவேண்டும்.  

போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 1

கடந்த காலத்தில் வீதிகள் தோறும் படிப்பகங்கள் இருந்தது போல நாடு முழுவதும் தமிழ் கல்வி கூடங்கள்  ஏற்படுத்தி தமிழை பரப்ப வேண்டும். இதற்கு நிறைய மனமும், அதை விடக் கூடுதலாக பணமும் வேண்டும். ஆனால் அப்பாவி தமிழர்களை இந்தி பூச்சாண்டி காட்டி பயத்தில் வைப்பது அவற்றை விட எளிது என்பதால் அவற்றை திமுக செய்கிறது. மற்ற கட்சிகள் அதனை வழிமொழிகின்றன.

இந்த சூழ்நிலையை மாற்றி தமிழகத்தை மீண்டும் தேசிய நீரோட்டத்தில் திருப்ப வேண்டிய பங்கு காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் போன்ற கட்சிகளுக்கு தான் அதிகம். இதில் இடதுசாரிகள் தேசியத்தை விட்டு வெகு துாரம் கடந்து வந்துவிட்டனர். ஆனால் காங்கிரஸ், பாஜக கட்சிகள் இன்றும் கூட தேசியத்தின் பக்கம் தான் இருக்கின்றன.

காங்கிரஸ் கட்சி இந்திரா காலத்தில் இருந்தே அதிமுக ஆதரவு, திமுக ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு திமுக ஆதரவு மட்டும் தான் இருக்கிறது. திமுகவின் குரலாக காங்கிரஸ் ஒலிக்கிறது. இதனால் தான் தமிழகத்தில் இதுவரை ஆட்சிக்கு நெருக்கமாக கூட வரமுடியவில்லை.

பாஜகவும் இதே நிலைப்பாட்டை தான் எடுக்கிறது. பாஜகவில் அந்த கட்சியின் கொள்கை மட்டும் துாக்கி பிடிக்கும் தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டு, திமுக, அதிமுக ஆதரவு தலைவர்கள் தான் முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள்.

இவர்களும் கூட ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஸ்டாலின் அடி வருடிகளாகவே மாறிவிட்டார்கள். இது போன்ற தலைவர்கள் ஸ்டாலினுக்கு கூஜா துாக்கி தாளம் போடுவதால், ஸ்டாலின் உண்மையிலேயே தகுதி வாய்ந்த தலைவர் போல என்ற கருத்தை தமிழகத்தில் தாங்கள் அறியாமலே விதைக்கிறார்கள். 

இப்படிப்பட்ட தலைவர்களை தமிழகத்தில் வைத்துக்கொண்டு, பாஜக இங்கு வளர வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைப்பதெல்லாம் மோசமான பகல் கனவுதான். அமித் ஷா இதை புரிந்து கொள்ள வேண்டும். 

நாடு முழுவதும், மோடி அலை வீசிய போதும் கூட, தமிழகத்தில், அதிமுக மற்றும் திமுக ஆகியவை வெற்றி பெற்றன என்றால், தமிழகத்தில் பாஜக பற்றியும், அதன் கொள்கைகள் பற்றியும் மக்களிடம் கொண்டு செல்லாத செல்லத்தெரியாத தலைவர்கள், மாநில அளவில் பதவிகளை அலங்கரித்தது தான் காரணம்.

தமிழக பாஜகவில் அப்படி என்ன தான் செய்து விட்டனர் இங்குள்ள தலைவர்கள் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். 
தொடரும்...

https://www.newstm.in/news/national/politics/70409-special-article-about-bjp-dmk-anti-hindi-2.html

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP