பெரும்பான்மை இல்லாததால் ஃபட்னாவிஸ் ராஜினாமா - பீட்டர் அல்போன்ஸ்!!!

பெரும்பான்மை இல்லாததால் தான் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார் என்று கூறியுள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.
 | 

பெரும்பான்மை இல்லாததால் ஃபட்னாவிஸ் ராஜினாமா - பீட்டர் அல்போன்ஸ்!!!

பெரும்பான்மை இல்லாததால் தான் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார் என்று கூறியுள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.

மகாராஷ்டிரா முதலமைச்சராக கடந்த சனிக்கிழமையன்று பதிவியேற்றிருந்த பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தற்போது ராஜினாமா செயதுள்ளதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பது நன்றாக தெரிந்ததால் தான் அவர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான பீட்டர் அல்போன்ஸ்.

மேலும், சிவசேனா ஆட்சிக்கு வந்த பிறகு இப்படிப்பட்ட ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களில் பாஜக ஈடுபட கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.

இதனிடையில், மகாராஷ்டிரா முதலமைச்சர், துணை முதலமைச்சர் என இருவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகின்றது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP