கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! பாஜக - காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் மோதல்..

கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 17 சட்டப்பேரவை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 | 

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! பாஜக - காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் மோதல்..

கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 17 சட்டப்பேரவை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி கட்சியை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் குமாரசாமி ஆட்சி மீதான அதிருப்தி காரணமாக தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அவர்களை நீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்தார். அந்த தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 17 தொகுதிகளில் மஸ்கி, ஆர்.ஆர் நகர் ஆகிய இரண்டு தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக அந்த இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக 105 இடங்களை கொண்டு ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி 99 இடங்களை கைவசம் வைத்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் வெற்றியை பொறுத்து கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் கூட ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP