தேர்தல் வேலை செய்ய மாட்டேன்: சஞ்சய் நிருபம் திட்டவட்டம்!!

மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தேர்தல் குழு தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாகவும், அதனால், தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேலை செய்ய மாட்டேன் எனவும் அந்த மாநில கட்சித் தலைவர் சஞ்சய் நிருபம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 | 

தேர்தல் வேலை செய்ய மாட்டேன்: சஞ்சய் நிருபம் திட்டவட்டம்!!

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தேர்தல் குழு தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாகவும், அதனால், தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேலை செய்ய மாட்டேன் எனவும் அந்த மாநில கட்சித் தலைவர் சஞ்சய் நிருபம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தேர்தல் குழு தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக அம்மாநில கட்சித் தலைவர் சஞ்சய் நிருபம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

"நான் மஹாராஷ்டிரா மாநில தேர்தலுக்காக, நால்வரின் பெயரை தான் பரிந்துரை செய்தேன். ஆனால், அது முழுவதுமாக நிராகரிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. பல ஆண்டுகலாக கட்சியில் இருப்பவர்களை மதிக்காமல், புதிதாக வந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, கட்சிக்காக உழைத்தவர்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. காங்கிரஸிற்கு எனது சேவை இனி தேவையில்லை போலும். இதனால், இந்த தேர்தலுக்கான பணிகளில் நான் ஈடுபடபோவதில்லை" எனக் வருத்தம் கலந்த கோபத்துடன் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

ஹரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வாரும், முக்கிய காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்தலில் பங்குபெற அனுமதிக்காமல், போட்டியிட விரும்புபவர்களிடம் 5 கோடி ரூபாய் விலைக்கு சீட்டுகளை விற்று வருவதாகவும் , இதுவரை கட்சிக்காக உழைத்தவர்களை மதிக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சியின் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இதற்காக, அவர், சோனியா காந்தியின் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன் மறியலில் ஈடுபட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. 

மேலும், மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கிரண் சௌத்ரி பரிந்துரை செய்த வேட்பாளர்களின் பெயர்களும், பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இப்படி அதிருப்தி அடைந்திருப்பது, தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு தடையாக இருக்கலாம் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP