Logo

பொய் கூறுபவர்களுடன் பேச மாட்டேன் - உத்தவ் திட்டவட்டம்!!!

மகாராஷ்டிரா : தேர்தல் முடிவுகள், தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா என அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையிலும், அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்த தீர்மானத்திற்கு இன்னும் வரவில்லை பாஜக-சிவசேனா கூட்டணி.
 | 

தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு சுமார் 2 வாரங்களுக்கு மேல் ஆகியும், முதலமைச்சர் பதிவியில் அமரப்போவது யார் என்ற தீர்மானத்திற்கு வரவில்லை பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி. இந்நிலையில், நேற்று மகாராஷ்டிரா மாநில ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த அம்மாநில முதலைமைச்சரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா குறிப்பிடுவது போல தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் பதிவி குறித்தோ, 50-50 என்ற விதியை குறித்தோ எந்த வாக்கும் பாஜக தரப்பிலிருந்து அளிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

இவரின் இந்த கருத்தினால் அதிருப்தியடைந்துள்ள சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, "தற்போதைய எங்களின் கோரிக்கைகள் எதுவுமே புதிதாக முன் வைக்கப்பட்டுள்ளது இல்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சம்மதத்துடன் தான் நாங்கள் தேர்தலில் கூட்டணியாக போட்டியிட முன் வந்தோம்" என்று கூறியுள்ளார்.

"என்னை தொலைபேசி மூலம் பலமுறை அழைக்க முயற்ச்சித்தாக பட்னாவிஸ் கூறியிருந்தார். ஆம் உண்மைதான். ஆனால் நான் அவர்களுடன் பேசும் நோக்கத்துடன் இல்லை" என்று கூறிய உத்தவ், தனக்கு பொய்காரன் பட்டமளிக்கும் நிஜமான பொய்காரர்களிடம் பேச தான் தயாராக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP