டெல்லி பாஜகவின் முதல்வர் வேட்பாளருக்கான போட்டியில் இருப்பவர்கள் யார் தெரியுமா??

வரும் ஜனவரி - பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர்ப்பார்க்கபடும் நிலையில், முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான உச்சநீதிமன்ற வழக்கறிஞரான மீனாட்சி லேஹி உட்பட ஐந்து பேர் அதற்கான போட்டியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் கோயல், முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், மத்திய அமைச்சரான ஹர்ஷ வர்தன், டெல்லி பிரதேச பாஜக கட்சித் தலைவரான மனோஜ் திவாரி, மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞரான மீனாட்சி லேஹி ஆகிய ஐவரும் முதல்வர் வேட்பாளர்களுக்கான போட்டியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இந்த ஐவரில், யார் முதலமைச்சராக அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்த கருத்துக்கணிப்பில், மனோஜ் திவாரியின் பெயர் வெளிவந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கட்சிக்கு தீவிரமாக உழைத்ததுடன், அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை வெற்றியடைய வைத்தவர் என்ற சிறப்பு அவருக்கு உள்ளதால், அவரே தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP