Logo

இயற்சை எழில் கொஞ்சும் இந்தியாவின் ஸ்காட்லாந்து எது தெரியுமா?

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ளது கூர்க் அல்லது குடகு என்று அழைக்கப்படும் மிக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. இவை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.
 | 

இயற்சை எழில் கொஞ்சும் இந்தியாவின் ஸ்காட்லாந்து எது தெரியுமா?

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ளது கூர்க் அல்லது குடகு என்று அழைக்கப்படும் மிக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. இவை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. 

கூர்க் போகவேண்டும் என்றால் மடிகேரி என்ற ஊர்தான் முதலில் செல்வார்கள். ஏனென்றால் இதை சுற்றிதான் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.  கர்நாடகாவின் தென்மேற்கு பகுதியில்  மேற்கு தொடர்ச்சி மலையில் மலநாட் பிரதேசத்தில் உள்ளது. இந்த மலைப்பிரதேசத்தில் பனி படர்ந்த மலைமுகடுகள், பச்சைப்பசேலென்ற பள்ளத்தாக்குகள், பசுமையான காடுகள், மனம் கமழும் பரந்த தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், ஆரஞ்சுப் பழத்தோட்டங்கள், அழகான நீர்வீழ்ச்சிகள், சலசலவென ஓடும் ஓடைகள்  என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் இது கர்நாடகாவின் காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஸ்காட்லாந்து  என்றும் அழைக்கப்படுகிறது.  

இயற்சை எழில் கொஞ்சும் இந்தியாவின் ஸ்காட்லாந்து எது தெரியுமா?

குடகு மலையின் மேற்கு மற்றும் கிழக்குப் பக்கச் சரிவுகளில் அமைந்த ஆரவாரமில்லாத, மிதமான வேகத்தில் நகரும் சிறிய நகரங்களையும், இயற்கை அழகு கொஞ்சும் அமைதியான கிராமப்புறங்களையும் காணலாம்.   இம்மலைப் பிரதேசத்தின் வித்தியாசமான தட்பவெப்பநிலையையும்,வியக்கத் தக்க எழிலையும், பசுமையான  வனபகுதியையும் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் வரையான உயரத்தில் இது அமைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், ஜூன் மாதம் வெப்பநிலை குறைந்து காலநிலை ஜில் என்று மாறுகின்றது.  குறைந்த வெப்பநிலை 4.5 ° C என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நகரம் கிழக்கே மைசூர் நகரையும், மேற்கே மங்களூர் நகரையும் கொண்டுள்ளது.

இயற்சை எழில் கொஞ்சும் இந்தியாவின் ஸ்காட்லாந்து எது தெரியுமா?

குடகு என்று பெயர்வர காரணத்திற்கு பல கருத்துகள் சொல்லப்படுகிறது, அவற்றில் கொடவா என்னும் பழங்குடியினரின் வாழ்விடமாக விளங்கிய இப்பகுதி பழங்குடியினரின் மொழியில் குரோத தேசா என்ற சொல் மூலம் குடகு என்று பெயர் பெற்றிருக்கலாம் என்பது ஒரு சிலரால் கருதப்படுகிறது. கொடவா என்ற சொல் காவிரி அன்னையை அழைக்கப் பயன்பட்டது என்பது மற்ற சிலரின் கருத்தாகும். ஆங்கிலேயர்கள் குடகு என்பதற்குப் பதில் கூர்க் என்றழைத்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய காபி உற்பத்தி செய்யும் மாவட்டமாக கூர்க் உள்ளது.  அராபிக் மற்றும் ரோபஸ்டா எனும் காபி வகைகள் இங்குப் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. காபியைத் தவிர,  தேன், ஏலக்காய், மிளகு மற்றும் ஆரஞ்சு போன்றவையும் கூர்க் பகுதியின் விளைபொருட்களாக உள்ளன. இந்தியாவில் அதிக மழைப்பொழிவு கொண்ட இடங்களில் இதுவும் ஒன்றாகும். 

இயற்சை எழில் கொஞ்சும் இந்தியாவின் ஸ்காட்லாந்து எது தெரியுமா?

இங்கு பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இந்த மாவட்டத்தில் வாழ்கிறார்கள். இங்குள்ள மக்கள் மற்ற இந்திய சமூக மக்களிடமிருந்து தங்கள் பழக்கவழக்கங்கள், மரபுகள், நம்பிக்கைகள், குடும்பக் கட்டமைப்பு, உணவு மற்றும் பாரம்பரிய உடைகளால் வேறுபடுகின்றனர்.  கூர்க் பகுதியின் பொருளாதாரம் விவசாயம், காபித் தோட்டங்கள், வனவியல் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த மலைவாசஸ்தலம் நன்கு பராமரிக்கப்படுகிறது.

கூர்க்கில் பார்க்க வேண்டிய இடங்கள் :

இங்கு ராஜா சீட், அபே நீர்வீழ்ச்சி, மடிகேரிக் கோட்டை போன்ற சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன. தலைக்காவிரி பாகமண்டலா, திபெத்திய தங்கக் கோயில், ஓம்காரேஸ்வரா கோயில் மற்றும்  போன்ற போன்ற புனித யாத்திரைத் தலங்களும் உள்ளன. காவேரி நிசர்கதாமா, துபாரே யானை முகாம்  போன்ற இயற்கை எழில்கொஞ்சும் இடங்கள் போன்று கூர்க்கில் பார்க்க வேண்டிய இடங்களாகும். இந்த மலைப்பகுதி தாவரங்களாலும் விலங்குகளாகவும் நிறைந்திருப்பதால், இங்குத் தலைக்காவேரி, புஷ்பகிரி மற்றும் பிரம்மகிரி ஆகிய மூன்று வனவிலங்குச் சரணாலயங்களும், தேசிய பூங்காவும் உள்ளன. இது தவிர, சுற்றுலாப் பயணிகள் யானை மேல் சவாரி செய்தும் மகிழ்கின்றனர். இங்கு மலை ஏற்றம்,  தூண்டில் மீன் பிடித்தல், பரிசல் சவாரி போன்ற விளையாட்டுகளில் பங்கு பெறுகின்றனர். 

இயற்சை எழில் கொஞ்சும் இந்தியாவின் ஸ்காட்லாந்து எது தெரியுமா?

கொடகு பகுதியின் தெற்கு பகுதியில் பிரம்மகிரி மலையிலுள்ள மேல் பரபோலே ஆற்றுப் பகுதி பலவிதமான நீர் விளையாட்டுகளுக்குப் பிரசித்தி பெற்றது. கர்நாடக மாநிலம் ஹாசன், தட்சிண கன்னடா மற்றும் மைசூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர்களும் குடகு மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா செல்லப் பொருத்தமான மலை வாசஸ்தலம் ஆகும்.  

கூர்க் எப்படி செல்வது :

- முதலில் மைசூர் செல்ல வேண்டும், பிறகு அங்கிருந்து மடிக்கேரி சென்று கூர்க் பகுதிக்கு பேருந்தில் செல்லலாம்.
 - சென்னையில் இருந்தும் கூர்க் சுற்றுலாப் பகுதிக்கு செல்ல போதிய பேருந்து வசதிகள் உள்ளது.
- கோவையில் இருந்தும் மிக அருகில் கூர்க் பகுதிக்கு செல்லலால். இங்கு இருந்து செல்லும் போது பல சுற்றுலாத் தலங்களைக் காணமுடியும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP