Logo

குடிநீர் பிரச்னையை தீர்க்க இளைஞர்கள் நூதன போராட்டம்!

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ராஸ் மாவட்டத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க, 50 இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று நூதனப் போராட்டம் மேற்கொண்டனர்.நாக்லா மாயா கிராமத்தில் இப்போராட்டம் நடைபெற்றது.
 | 

குடிநீர் பிரச்னையை தீர்க்க இளைஞர்கள் நூதன போராட்டம்!

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ராஸ் மாவட்டத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க, 50 இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று நூதனப் போராட்டம் மேற்கொண்டனர்.

ஹாத்ராஸ் மாவட்டத்துக்குட்பட்ட  நாக்லா மாயா கிராமத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அந்த இளைஞர்கள், தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நிதித் திரட்டுவதற்காக, தங்களை தாங்களே ஏலம் விடுவதாக அறிவித்து நூதன போராட்டத்தில் இறங்கினர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, " எங்கள் மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் குடிநீர் பஞ்சம் நீடித்து வருகிறது. இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகள்,  அரசின் கவனத்துக்கு பலமுறை எடுத்துச் சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவி்ல்லை. அதனால்தான் இப்படியொரு போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்" என அவர்கள் தெரிவித்தனர்.

குடியரசுத் தினத்தன்று நடைபெற்ற இப்போராட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியர், ஹாத்ராஸ் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.இதையடுத்து இளைஞர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP