காதலை ஏற்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரன்

கேரளாவின் திருவல்லா பகுதியில், பட்டப்பகலில், காதலை மறுத்த 18 வயது இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
 | 

காதலை ஏற்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரன்

கேரளாவின் திருவல்லா பகுதியில், பட்டப்பகலில், காதலை ஏற்க மறுத்த 18 வயது இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். 

கேரள மாநிலம் திருவல்லா பகுதியை சேர்ந்த இளம்பெண்ஒருவர், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு ரெடியாலஜி படித்து வந்துள்ளார். இன்று காலை கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த அந்த பெண், சிலங்கா என்ற பகுதியில் ஒரு இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, இளம்பெண் மீது அந்த இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். 

தப்பிக்க முயன்ற அவரை, அப்பகுதி மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், 75% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

காவல்துறை நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் அஜின் ரெஜி மேத்யூ என்று தெரிய வந்தது. காதலை மறுத்ததால் பாதிக்கப்பட்ட பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். 

அந்த பெண்ணை சந்திக்க செல்லும் போதே, அவர் இரண்டு பாட்டில்களில் பெட்ரோலுடன் சென்றதால், இது திட்டமிட்ட கொலையாக இருக்க கூடும் என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP