பிரியங்கா குற்றச்சாட்டுக்கு முதல்வர் யோகி பதில்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தலில் தோற்றதால் அவரது சகோதரி பிரியங்கா வாத்ரா ஆதங்கத்தில் ஏதோ உளறுகிறார் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 | 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று அம்மாநில கிழக்கு பகுதிக்கான காங்கிரஸ் கட்சி பொதுச் செயலரான பிரியங்கா வாத்ரா நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.

தற்போது அவர் லண்டனிலோ, இத்தாலியிலோ சுற்றுப்பயணத்தில் இருப்பார். இருந்தாலும் மனதை தேற்றி கொள்ளும் வகையில் அவரது சகோதரி பிரியங்கா வாத்ரா, உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2 வருடங்களில் 9 ஆயிரத்து 225 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், 81 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டும் உள்ளனர். மேலும் முறைகேடாக வருமானம் ஈட்டப்பட்ட 200 கோடி ரூபாய் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP