Logo

சட்டப்பேரவைக்கு எடியூரப்பா, சித்தராமையா வருகை!

கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் எடியூரப்பா, சித்தராமையா ஆகியோர் சட்டப்பேரவை வந்துள்ளனர்.
 | 

சட்டப்பேரவைக்கு எடியூரப்பா, சித்தராமையா வருகை!

கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் எடியூரப்பா, சித்தராமையா ஆகியோர் சட்டப்பேரவை வந்துள்ளனர். 

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவை பதவியேற்றது முதலே பல்வேறு பிரச்னைகள் சந்தித்து வரும் நிலையில், ஆளும் குமாரசாமி அரசுக்கு எதிராக, காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் 16 பேர் (காங்கிரஸ் - 13, மஜத -3) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  

இது தொடர்பாக கர்நாடக எம்.எல்.ஏக்கள் 15 பேர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில்,  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.  எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்ளும்படி சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது; அதேபோன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி  எம்.எல்.ஏக்கள்  கலந்துகொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதை தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் தாங்கள் பங்கேற்க போவதில்லை என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதையொட்டி எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்ட பாஜக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP