கேரளாவை உலுக்கிய பெண் கொலையாளி கைது

கேரள மாநிலத்தில், பெண் குழந்தை பிடிக்காத காரணத்தினாலும், சொத்துக்கள் மீது கொண்டிருந்த மோகத்தாலும், தனது கணவர் குடும்பத்தினர் அனைவரையும், உணவில் சயனைடு வைத்து கொன்ற பெண் கொலையாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
 | 

கேரளாவை உலுக்கிய பெண் கொலையாளி கைது

கேரள மாநிலத்தில், பெண் குழந்தை பிடிக்காத காரணத்தினாலும், சொத்துக்கள் மீது கொண்டிருந்த மோகத்தாலும், தனது கணவர் குடும்பத்தினர் அனைவரையும், உணவில் சயனைடு வைத்து கொன்ற பெண் கொலையாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடவுளின் நாடாக கருதப்படும் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த கூடத்தாயி கிராமத்தில், கடவுளையே அதிர வைக்கும் அளவு ஆறு கொலைகளை செய்துவிட்டு, சாதுவாக வலம் வந்து கொண்டிருந்த ஜாலி தாமஸ் (47) ஐ, கேரள போலீசார் கைது செய்துள்ளனர். இவரது முதல் கணவரான ராய் தாமஸின் தாயார் அன்னம்மா கடந்த 2002ம் , தந்தையார் 2008ம், ராய் தாமஸ் 2011 ஆம் ஆண்டிலும் மர்மமான முறையில் இறந்ததுள்ளனர். இவர்களது இறப்பு சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளும்படியும் போலீசாரிடம் வழக்கு பதிவு செய்த ராய் தாமஸின் தாய்மாமாவும் கடந்த 2014 ஆம் ஆண்டு மரணம் அடைந்துள்ளார். பிரேத பரிசோதனையில் வெளிவந்த சில துருப்புகளைக் கொண்டு, இந்த மர்மமான இறப்புகள் குறித்து, கேரள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு தற்போது, ராய் தாமஸின் மனைவி, ஜாலி தாமஸ்-ஐ கைது செய்துள்ளனர். 

இவர் கைது செய்யப்பட்ட பின்பு நடைபெற்ற விசாரணையில், கணவர்  ராய் தாமஸின் மைத்துனரான ஷாஜு மீது ஜாலி காதல் வசப்பட்டதாகவும், கணவரின் மரணத்துக்கு பின்னர், ஷாஜுவை திருமணம் செய்துகொண்ட ஜாலி, கடந்த 2016-ம் ஆண்டில் ஷாஜுவின் முதல் மனைவி சிலி மற்றும் ஒன்றரை வயது மகள் ஆகியோரையும் சாப்பாட்டில் சயனைடு கலந்து கொன்ற உண்மையும் தற்போது வெளியாகியுள்ளது.

ஷாஜு மீது காதல் ஏற்பட்ட நிலையிலும், முதல் கணவர் ராய் தாமஸின் சொத்துக்கள் மீதிருந்த மோகத்தால், அவரது குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டதாக விசாரணையில் கூறியுள்ளார் ஜாலி. மேலும், கணவர் ராய் தாமசின் தாயார் அன்னம்மா தொடங்கி ராய் தாமஸின் மாமா மேத்யூ வரை உணவில் சயனைட் கலந்து கொடுத்து கொன்றதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என போலீசார் தகவலளித்துள்ளனர்.

இவரது கொலைகளுக்கு இவருக்கு உதவியாக இருந்தவர்களையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கத்தோலிக்க கிறிஸ்தவப் பெண்ணான ஜாவி தாமஸ், தேசிய தொழில்நுட்ப கழகமான என்.ஐ.டி யில் பேராசிரியராக பணியாற்றி வந்ததாகவும், மிகவும் அன்பும் பக்தியும் நிறைந்த ஒரு பெண்ணாகவுமே தோன்றியதாகவும், அவர் இப்படி செய்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் அவரது சுற்றத்தார்கள் கூறுகின்றனர்.

Newstm.in

 

 

 

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP