சிகிச்சையின்போது வாய் வெடித்து பெண் சாவு - மருத்துவர்கள் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிகிச்சையின் போது பெண்ணின் வாய் வெடித்ததில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 | 

சிகிச்சையின்போது வாய் வெடித்து பெண் சாவு - மருத்துவர்கள் அதிர்ச்சி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிகிச்சையின்போது, எதிர்பாராதவிதமாக பெண்ணின் வாய் வெடித்ததில் அவர் உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து மருத்துவர்கள் அந்த பெண்ணின் வாயில் ஆக்சிஜன் பைப்பை சொருகியுள்ளனர். சிறிது நேரத்தில் வாயில் சொருகப்பட்டிருந்த ஆக்சிஜன் பைப் வெடித்து சிதறியுள்ளது.

இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், இறந்த பெண்ணை சோதித்தபோது அவர் கந்தக அமிலத்தை குடித்துள்ளது தெரிய வந்தது.

இதனால், அந்த பெண்ணின் வாயில்  ஆக்சிஜன் செலுத்தப்பட்டதும் அந்த குழாய் வெடித்து சிதறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP