யூனிஃபார்ம் எங்கே எனக் கேட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை!

ஏன் யூனிஃபார்ம் அணியவில்லை எனக் கேட்ட ஆசிரியரை கண்மூடித்தனமாக தாக்கிய மாணவரை போலீஸார் கைது செய்தனர்.கேரள மாநிலம், கட்டாப்பனா பகுதியில் குமலி எனுமிடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருபவர் அபின் சுரேஷ்.
 | 

யூனிஃபார்ம் எங்கே எனக் கேட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை!


பள்ளிச் சீருடை (யூனிஃபார்ம்) ஏன் அணியவில்லை எனக் கேட்ட ஆசிரியரை கண்மூடித்தனமாக தாக்கிய மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், கட்டாப்பனா பகுதியில் குமலி எனுமிடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1  படித்து வருபவர் அபின் சுரேஷ். இவர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை வாங்க நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது சுரேஷ் பள்ளி சீருடை அணியாமல் சென்றதால், அதுகுறித்து புவியியல் பாட ஆசிரியரான ஜெயதேவ் மாணவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், ஆசிரியரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். 

சுரேஷ் தன்னை இருப்பு கம்பியால் வயிற்றில் தாக்கியதாகவும் ஆசிரியர் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாணவர் சுரேஷை போலீஸார் கைது செய்தனர்.

மாணவன் தாக்கியதில் முகத்திலும், காதிலும் காயமடைந்த ஆசிரியர் ஜெயதேவ், சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP