Logo

 எங்க புலியை பத்திரமா பாத்துக்குங்க...! மத்தியப் பிரதேச வனத் துறை குஜராத் அரசுக்கு கடிதம்!

மத்தியப் பிரதேசத்தில் இருந்து குஜராத் மாநில எல்லைக்கு வழித் தவறி சென்ற புலியை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி, மத்தியப் பிரதேச வனத் துறை அதிகாரிகள் குஜராத் வனத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
 | 

 எங்க புலியை பத்திரமா பாத்துக்குங்க...! மத்தியப் பிரதேச வனத் துறை குஜராத் அரசுக்கு கடிதம்!

மத்தியப் பிரதேசத்தில் இருந்து குஜராத் மாநில எல்லைக்கு வழித் தவறி சென்ற புலியை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி, மத்தியப் பிரதேச வனத் துறை அதிகாரிகள், குஜராத் வனத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், நக்டா மலைப் பிரதேசத்திலிருந்து கடந்த 2017 ஜனவரி மாதம் ஒரு புலி காணாமல் போனது. அந்த மாநில வனத் துறையினரின் பராமரிப்பில் இருந்து வந்த அந்த புலியின் பயண வழித்தடங்களை அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவின் மூலம் தொடர்ந்து ஆராய்ந்து வந்தனர்.

அதில் காணாமல் போன அந்தப் புலி, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 300 கி.மீ. பயணம் செய்து, தற்போது குஜராத் மாநில எல்லையை அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, தங்களது மாநிலத்தைச் சேர்ந்த புலியை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி,  குஜராத் மாநில வனத் துறை அதிகாரிகளுக்கு, மத்தியப் பிரதேச வனத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP