Logo

ஜம்மு -காஷ்மீர் பேரவைக்கு தேர்தல் எப்போது? : ஆணையம் விளக்கம்

ஜம்மு -காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
 | 

ஜம்மு -காஷ்மீர் பேரவைக்கு தேர்தல் எப்போது? : ஆணையம் விளக்கம்

ஜம்மு -காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. இந்த மாநில பேரவைக்கு, வரும அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டிய நிலையில், தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரை முடிவடைந்ததும், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகு, இம்மாநிலத்தில் ஆறு மாதங்கள் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஆளுநர் ஆட்சி நிறைவடைந்ததையடுத்து, தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP