மீண்டும் போராட்டம் நடத்த வேண்டுமா? - பிஷப் விவகாரத்தில் கன்னியாஸ்திரிகள் எச்சரிக்கை

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பிஷப் பிராங்கோ முலக்கல் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், மீண்டும் போராட்டத்தை துவக்குவோம் என கன்னியாஸ்திரிகள் காவல்துறையிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 | 

மீண்டும் போராட்டம் நடத்த வேண்டுமா? - பிஷப் விவகாரத்தில் கன்னியாஸ்திரிகள் எச்சரிக்கை

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பிஷப் பிராங்கோ முலக்கல் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், மீண்டும் போராட்டத்தை துவக்குவோம் என கன்னியாஸ்திரிகள் காவல்துறையிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரியை, ஜலந்தர் பிஷப் பிராங்கோ முலக்கல், பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது. 2014 முதல் 2016 வரை பலமுறை தன்னை பிஷப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த கன்னியாஸ்திரி குற்றம்சாட்டியிருந்தார். 

ஆனால், அதிகார பலம் பெற்ற பிஷப் மீது நடவடிக்கை எடுக்க, காவல்துறை தயங்கி வந்ததாக கூறப்பட்ட நிலையில், போராட்டங்கள் நடைபெற்றன. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக 4 கன்னியாஸ்திரிகள் குரல் கொடுத்தனர். போரட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, பிஷப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு இறுதியில், அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின் ஜாமினில் வெளியே வந்து, தற்போது பஞ்சாபில் இருக்கிறார்.

கடந்த மாதம், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக இருந்த 4 கன்னியாஸ்திரிகளை, நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மாற்றி டயோசீஸ் உத்தரவிட்டது. அதன்பின், மீண்டும் போராட்டம் நடைபெற்றதால், அந்த உத்தரவும் திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து முன்னாள் பிஷப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், காவல்துறை காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நின்ற 4 கன்னியாஸ்திரிகளும், இன்று கோட்டயம் காவல்துறை எஸ்பி-யை சந்தித்தனர். விரைவில் பிராங்கோ முலக்கல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம், என கன்னியாஸ்திரிகள் எச்சரிகை விடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த வாரத்திற்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை உறுதி அளித்ததாகவும், அவர்கள் கூறினர். மேலும், "பிரான்கோ மிகவும் அதிகார பலம் கொண்டவர். அரசியல் ரீதியாகவும், பணபலமும் கொண்டவர். எனவே, அவருக்கு எதிரான சாட்சிகள் கடும் நெருக்கடியில் உள்ளார்கள்" என்றும் கூறினர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP