Logo

போராட்டத்தில் வெடித்த வன்முறை-பற்றி எரியும் அசாம்..! 

போராட்டத்தில் வெடித்த வன்முறை-பற்றி எரியும் அசாம்..!
 | 

போராட்டத்தில் வெடித்த வன்முறை-பற்றி எரியும் அசாம்..! 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. 

மாநில தலைநகா் குவாஹாட்டியில் தலைமை செயலகம் முன்பு கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை தடுக்க முயன்ற பாதுகாப்புப் படையினருக்கும், ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

போராட்டத்தில் வெடித்த வன்முறை-பற்றி எரியும் அசாம்..! 

குவாஹாட்டி மட்டுமின்றி திப்ரூகா், ஜோா்ஹாட், கோலாகாட், தின்சுகியா, ஷிவ்சாகா், பொங்கைகான், நாகௌன், சோனித்பூா் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலை முதலே தன்னிச்சையான போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனா். அவர்களை மீது தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தாலும் வேறொரு இடத்தில் ஒன்று திரண்டு போராடுவதால் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர். 

போராட்டத்தில் வெடித்த வன்முறை-பற்றி எரியும் அசாம்..! 

சாலையில் டயர்களையும் வாகனங்களையும் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். சாலையோரம் நிற்கும் வாகனங்கள், அரசு வாகனங்களையும் போராட்டக்காரர்கள் விட்டுவைக்கவில்லை. ஆா்ப்பாட்டம் நடைபெற்ற இடங்களில் வாகன போக்குவரத்து முற்றிலும் சீா்குலைந்தது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனிடையே போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் குவாஹாட்டியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
அசாமில் நிலவி வரும் போராட்டங்கள் காரணமாக அனைத்து ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டன. மேலும் வன்முறையை தடுக்கும் நோக்கில் அசாமில் 10 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் வெடித்த வன்முறை-பற்றி எரியும் அசாம்..! 

மாநிலம் முழுவதும் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தவும் 2 ஆயிரம் ராணுவ வீரா்களை கொண்ட 20 கம்பெனி துணை ராணுவத்தினா் காஷ்மீரில் இருந்து உடனடியாக வரவழைக்கப்பட்டு பதற்றமான பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனா். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP