உத்தரப்பிரதேசம்: எம்.எல்.ஏ., மீது துப்பாக்கி சூடு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக உள்ள யோகேஷ் வர்மா மீது இன்று துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.
 | 

உத்தரப்பிரதேசம்: எம்.எல்.ஏ., மீது துப்பாக்கி சூடு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக உள்ள யோகேஷ் வர்மா மீது இன்று துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமான லக்கிம்பூர் கேரி, நேபாள எல்லையில் உள்ளது. இந்த லக்கிம்பூர் கேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக யோகேஷ் வர்மா பதவி வகிக்கிறார். 

நேற்று முதல் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதனை கொண்டாடும் விதமாக லக்கிம்பூர் கேரியில் உள்ள பாஜக அலுவலகத்திலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி கொண்டாட்டத்தின் போது யோகேஷ் சர்மா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவருடைய காலில் குண்டு பாய்ந்தது. 

இதையடுத்து காயமடைந்த எம்.எல்.ஏ யோகேஷ்  வர்மா சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP