உ.பி. கால்வாயில் மூழ்கிய 7 சிறுவர்களை தேடும் பணிகள் தீவிரம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தண்ணரீல் மூழ்கிய 7 சிறுவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
 | 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 29 பயணிகளுடன் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனில் 7 சிறுவர்களும் இருந்தனர்.

இந்நிலையில் அந்த வேன் இந்திரா கால்வாய் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கால்வாயில் பாய்ந்தது.

கால்வாயில் அதிக அளவில் தண்ணீர் இருந்ததால் வேனில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 7 சிறுவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP