உ.பி. படிக்க விரும்பிய மகளை கொலை செய்ய முயன்ற தந்தை

உத்தரப்பிரதேசத்தில் படிக்க ஆசைப்பட்டு, திருமணம் செய்து கொள்ள மறுத்த மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

உ.பி. படிக்க விரும்பிய மகளை கொலை செய்ய முயன்ற தந்தை

உத்தரப்பிரதேசத்தில் படிக்க ஆசைப்பட்டு, திருமணம் செய்து கொள்ள மறுத்த மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சாஜன்பூரை சேர்ந்த 15 மாணவி 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அந்த இளம் பெண்ணின் தந்தை மகளை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அந்த இளம்பெண் தான் படிக்க விரும்புவதாகவும் அதனால் திருமணம் வேண்டாம் என்று மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை தனது மகளை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். உடன் அவரது மகனும் சென்றுள்ளார்.

அங்கு அவரது மகன் தனது சகோதரியின் கழுத்தை துண்டால் இறுக்கியுள்ளார். அப்போது அந்த பெண்ணின் தந்தை மகள் என்றும் பாராமல் கத்தியால் அந்த பெண்ணை சரமாரியாக குத்தி அருகில் இருந்த வாய்க்காலுக்குள் வீசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த இளம்பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP