உ.பி. - கடன் பிரச்னையில் 2 வயது குழந்தை கொலை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடன் பிரச்னையில் 2 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

உ.பி. - கடன் பிரச்னையில் 2 வயது குழந்தை கொலை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடன் பிரச்னையில் 2 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் நகரில் உள்ள ஒருவரின் 2 வயது பெண் குழந்தை கடந்த மே மாதம் 30ம் தேதியிலிருந்து காணாமல் போயிருந்தது. இதையடுத்து குழந்தையின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அப்பகுதியில் இருக்கும் குப்பை தொட்டியிலிருந்து ஒரு குழந்தையின் உடலை அங்கிருந்த நாய்கள் வெளியே இழுத்தன. இதையடுத்து பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் பிணமாக மீட்கப்பட்ட குழந்தை காணாமல் போன குழந்தை என்றும் குழந்தையின் தந்தையிடம் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையின் தந்தையிடம் பணம் வாங்கிய சாயித் மற்றும் அஸ்லாம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP