உ.பி.: போலீஸ் கான்ஸ்டபிள் உடலுக்கு இறுதி அஞ்சலி!

உத்தரபிரதேச மாநிலம் ,காஸிபூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் உடலுக்கு, காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
 | 

உ.பி.: போலீஸ் கான்ஸ்டபிள் உடலுக்கு இறுதி அஞ்சலி!

உத்தரப்பிரதேச மாநிலம், காஸிபூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் உடலுக்கு, காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

காஜிபூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அப்பகுதியில் வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும், நிஷாத் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே  மோதல் ஏற்பட்டது.

மோதல் கலவரமாக வெடிக்கவே, கலவரக்காரர்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்கினர். இத்தாக்குதலில் சுரேஷ் வத்ஸ் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் பலியானார்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் இன்று காலை காஜிபூரிலிருந்து பிரயாக்ராஜுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு உத்தரப் பிரதேச மாநில காவல் துறை உயரதிகாரிகள்  உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP