Logo

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி: அதிகாரிகளின் பணி நேரத்தை அதிகரித்து உத்தரவு

உத்திரபிரதேச மாநிலத்தில், அதிகாரிகளின் வேலை நேரத்தை அதிகரித்த, முதலமைச்சர் யோகி ஆதித்யானாத்தின் புது முடிவால், மாநில அதிகாரிகள் அனைவரும் மிரண்டு போயுள்ளனர்.
 | 

முதலமைச்சர் ஆதித்யானாத் கூறுகையில், "முதலமைச்சரை சந்திக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் சந்திக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என 100 காரணங்கள் கூறி அதிகாரிகள் தங்கள் நேரத்தை வீணடிக்கின்றனர். பிரச்சனையை கூற வரும் மக்களை முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்ற காரணம் கூறி அவர்களின் பிரச்சனையை சரி செய்யும் பொறுப்பிலிருந்து தவறுகின்றனர். அதனால் தான் எந்த துறையுடானான சந்திப்பிற்கும் தலைமை செயலாளர் மட்டும் வந்தால் போதும் என்ற விதியை பிறப்பித்தேன்" எனக் கூறினார். 

முதலமைச்சரின் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "யோகிஜி தினமும் 17 மணி நேரம் வேலை செய்கிறார். அவர் மாநிலத்திற்காக செலவிடும் நேரத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என நினைப்பவர். இந்த நேரத்தை பின்பற்றுவது ஆரம்ப நாட்களாதலால் சற்று கடினமாகவே இருக்கிறது" என்று கூறினார்.

கடந்த வாரம், முதலமைச்சர் உட்பட அனைவரும் தங்கள் வரிப்பணத்தை தாங்களே செலுத்த வேண்டும் என்று சட்டம் உ.பி. யில் யோகி ஆதித்யானாத்தால் அமல் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP