ச்சீ...இதையெல்லாமா ஒரு மனுஷன் படம் பிடிப்பான்?

தகவல் பரிமாற்றத்துக்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன், ஸ்மார்ட்ஃபோனாக மாறிய பிறகு, எதை எதையெல்லாம் படம் பிடிப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இப்படியொரு அருவெறுக்கத்தக்க சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது
 | 

ச்சீ...இதையெல்லாமா ஒரு மனுஷன் படம் பிடிப்பான்?

தகவல்  பரிமாற்றத்துக்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன், ஸ்மார்ட்ஃபோனாக மாறிய பிறகு, எதை எதையெல்லாம் படம் பிடிப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இப்படியொரு அருவெறுக்கத்தக்க சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பைரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஜோடிக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் திருமணம் நடைபெற்றது. அன்று நடைபெற்ற முதலிரவு காட்சிகளை மாப்பிள்ளை, தமது ஸ்மார்ட்ஃபோனில் படம் பிடித்துள்ளார். மறுநாள் காலை இதை கண்டு அதிர்ச்சியடைந்த புதுமணப் பெண், இந்த வீடியோக்களை உடனடியாக டெலிட் செய்துவிடும்படி தன் கணவரிடம் கூறியுள்ளார். அவரும் மனைவியின் சொல்லை தட்டாமல் சரியென தலையாட்டியுள்ளார்.

ஆனால்,  அந்த வீடியோ பதிவுசெய்யப்பட்டு கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆன பிறகு, அதனை தமது கணவர் அழிக்காமல் அப்படியே வைத்துள்ளதை கண்டு, அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து கேட்டதும், "சும்மா...திரும்ப திரும்ப இதையே சொல்லிக்கிட்டிருந்தா...  இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விடுவேன்" என அப்பெண்ணின் கணவன் மிரட்டியுள்ளான். அத்துடன், தமது இளம் மனைவியை  இயற்கை மாறாக, செக்ஸ் என்ற பெயரில் கொடுமையும் செய்துள்ளான்.

இதுதொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பரதாரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP