கார் விபத்தில் இரண்டு மாணவர்கள் பலி 

உத்திர பிரதேச மாநிலம், நொய்டாவிலிருந்து ஆக்ரா செல்லும், யமுனா எக்ஸ்ப்ரஸ் வழிச் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில், அமிட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.
 | 

இது குறித்து போலீசார் கூறுகையில், "கடந்த வெள்ளியன்று, நொய்டா விலிருந்து ஆக்ரா செல்லும், யமுனா எக்ஸ்ப்ரஸ் வழிச் சாலையில் 5 மாணவர்கள் காரில் அதிவேகமாக பயணம் செய்தனர், அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதி எதிரே வந்த  பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது, இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்".

இதே போல், கடந்த செவ்வாயன்று, ராயல் என்பீல்ட் ஓட்டி வந்த இருவர், இதே யமுனா எக்ஸ்ப்ரஸ் வழிச் சாலையில் விபத்துக்குள்ளாகி, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP