இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பட்காம் மாவட்டம், கோபால்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
 | 

இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பட்காம் மாவட்டம், கோபால்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டை மேற்கொண்ட பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். 

பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் சுட்டதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

கோபால்போரா பகுதி தற்போது பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP