Logo

கும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், மகி பவுர்ணமி எனப்படும் மாசி மாத பவுர்ணமியான இன்று ஏராளமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
 | 

கும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் மகி பவுர்ணமி எனப்படும் மாசி மாத பவுர்ணமியான இன்று ஏராளமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், பிரயாக்ராஜ் நகரில் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்த கும்பமேளா தை 15ஆம் தேதி மகரசங்கராந்தி தினத்தன்று அதிகாலை 4 மணிக்குத் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலுடன் தொடங்கியது.

இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரில் திரண்டு கும்பமேளாவில் பங்கேற்று வருகின்றனர்.

மதுபழக்கம் இல்லாத மற்றும் மாமிசம் சாப்பிடாத சைவ போலீசார் 20ஆயிரம் பேர் கும்ப மேளா பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வி.ஐ.பிக்கள் ஹெலிகாப்டரில் வந்து செல்ல வசதியாக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகி பவுர்ணமி எனப்படும் மாசி மாத பவுர்ணமியான இன்று ஏராளமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். மகி பூர்ணிமாவை முன்னிட்டு இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP