திருப்பதி கோவில் தங்க கிரீடங்கள் மாயமான விவகாரம்: அர்ச்சகர்களிடம் தீவிர விசாரணை

திருமலை திருப்பதி கோவிலில் மூன்று தங்கக் கீரிடங்கள் மாயமானது குறித்து கோவில் அர்ச்சகர்களிடம் தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 1,351 கிராம் எடையுள்ள இவற்றின் மதிப்பு ரூ40 -50 லட்சம் ஆகும்.
 | 

திருப்பதி கோவில் தங்க கிரீடங்கள் மாயமான விவகாரம்: அர்ச்சகர்களிடம் தீவிர விசாரணை

திருமலை திருப்பதி கோவிலில் தங்கக் கீரிடங்கள்  மாயமானது குறித்து கோவில் அர்ச்சகர்களிடம் தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் தினமும் மாலை 5 மணி முதல் 5:45 மணி வரை, சுவாமிக்கு  சடங்குகள் மேற்கொள்ளப்படும் காரணத்தால், அப்போது பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இதேபோன்று வழக்கம்போல், சனிக்கிழமை மாலையும் சுவாமிக்கு அலங்காரங்கள் முடித்து, 5:45 -க்கு பக்தர்களை தரிசனத்துக்காக மீண்டும் அனுமதிக்க கோயில் நிர்வாகம் தொடங்கியது.

அப்போது பிரதான கோயிலை சுற்றியுள்ள பல்வேறு சன்னதிகளில்,  ஒரு சன்னதியின் கருவறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சுவாமிக்கு சாற்றப்படும் மூன்று தங்கக் கீரிடங்கள் காணாமல் போனதை அறிந்து அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மொத்தம் 1,351 கிராம் எடையுடைய,  ரூ,40 -50 லட்சம் மதிப்புள்ள தங்க கீரிடங்கள் மாயமானது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஆறு தனிப்படை போலீஸார், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது பணியிலிருந்த அர்ச்சகர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தேகம்படும்படி மாறப்பட்ட பதில்களை அளித்துள்ளனர்.

இதையடுத்து திருட்டு நடைபெற்ற நேரத்தில் பணியிலிருந்த அர்ச்சகர்களிடம் சந்தேகத்தின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP