வர்மக்கலையை பயன்படுத்தி மக்களை மயக்கமடைய செய்து கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் சாலையில் தனியாக நடந்து செல்பவர்களை வர்மக்கலையை பயன்படுத்தி மயக்கமடைய செய்து அவர்களிடமிருந்து பொருட்களை திருடி செல்லும் மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசியாபாத்தில் இரவு ரோந்தின் போது சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த மூவரை காவல் துறையினர் பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் கைத்துப்பாக்கியை கொண்டு காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.  

இந்நிலையில் அவர்களை மடக்கி பிடித்த காவல்துறையினர், மேற்கொண்ட விசாரணையில் அம்மூவரும் சாலையில் தனியாக நடந்து செல்பவர்களை துப்பாக்கியை காட்டி தடுத்து நிறுத்தி,  பின்னர் அவர்களில் ஒருவன் சாலையில் வந்தவரின்  பின்னால் சென்று கழுத்து, முதுகு,மற்றும் தோள்பட்டையில் குறிப்பிட்ட இடத்தை அழுத்தி மயக்கமடையச்  செய்து. அவர்களிடம் இருந்து கைபேசி, நகை ,பணம் உள்ளிட்டவற்றை  கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர் என தெரிய வந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP