கீழ் திருப்பதி கோவில் கிரீடம் திருட்டு: ஒருவர் கைது!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான, கோவிந்தராஜ சுவாமி கோவிலில், 3 கிரீடங்கள் திருட்டு போனது தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
 | 

கீழ் திருப்பதி கோவில் கிரீடம் திருட்டு: ஒருவர் கைது!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 3 கிரீடங்கள் திருட்டு போனது தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். 

ஆந்திர மாநிலம், கீழ் திருப்பதியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவில் உள்ளது. இங்கு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமானதாக கோவில் நிர்வாகிகள் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ள 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

இந்நிலையில், கோவிலில் இருந்த 3 கிரீடங்களை திருடி சென்ற ஆகாஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், 3 கிரீடங்களையும் ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் கிரீடங்களை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP