Logo

காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 | 

காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும்,  பாதுகாப்புப் படையினருக்கும் இடையே  நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து பிரிவினைவாதிகள், ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் ஸ்ரீநகரில் உள்ள கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அரசுப் பேருந்துகளும் இயங்கவில்லை, ஒரு சில இடங்களில் ஆட்டோ, வாடகை கார்கள் மற்றும் தனியார் பேருந்துகள் மட்டும் குறைந்த அளவில் இயங்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது..

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP