எக்ஸ்ரே அறைக்கு நோயாளியை போர்வையில் இழுத்து சென்ற அவலம்

மத்திய பிரதேச மாநிலத்தில் எக்ஸ்ரே அறைக்கு நோயாளியை ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்துச் செல்லாமல், போர்வைக்குள் வைத்து இழுத்து சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.
 | 

எக்ஸ்ரே அறைக்கு நோயாளியை போர்வையில் இழுத்து சென்ற அவலம்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே அறைக்கு நோயாளியை, ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்துச் செல்லாமல், போர்வைக்குள் வைத்து இழுத்து சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த நோயாளிக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் நோயாளி நடக்க முடியாத காரணத்தால் சக்கர நாற்காலி கூட கொண்டு வராமல் அங்கிருந்த ஊழியர் நோயாளியை போர்வைக்குள் வைத்து இழுத்து சென்றுள்ளார்.

இது குறித்து மருத்துவமனை முதல்வர் நவ்நீத் சக்சேனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் நவ்நீத் சக்சேனா தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP